ஸ்ரீ கே எம் சுப்ரமணியன் (சுகவனம்)
- karthikps
- Feb 24, 2018
- 1 min read
Updated: Jan 8, 2021

சென்னை அடையாரைச் சேர்ந்த இவர், அவரின் தாயார், ஸ்ரீமதி. சரஸ்வதி மயூரனாதன் அவர்களிடமே ஸ்ரீவித்யா மந்த்ரங்கள் உபதேசம் பெற்று அவரிடமே இந்த நவாவரண பூஜை முறைகளையும் செய்யக் கற்றுக்கொண்டு பல ஆண்டுகளாக அம்பிகையின் நவாவரண பூஜையை செய்து வருகிறார்.
நமது மறைமலை நகர், சட்ட மங்கலம் கிராமம், ஸ்ரீ பாலா த்ரிபுரசுந்தரி கோவிலில் அக்டோபர் 2015 முதல் பௌர்ணமிதோறும் மற்றும் நவராத்ரியிலும் இந்த நவாவரண பூஜையை ஸ்ரீ பாலா த்ரிபுரசுந்தரியின் அருளினால் செய்து வருகிறார்.
திரு. சுப்ரமணியன் அவர்களும் நமது ஆலய முக்ய நிர்வாகி , திரு. கார்த்திகேயனும் 1988 களிலே நண்பர்கள். ஆனாலும் சுமார் 15 ஆண்டுகள் அவரவர் அலுவல்கள் காரணமாக இடையிலே தொடர்பில்லா நிலையிலிருந்தனர். அவர்களுக்கிடையே மீண்டும் 2015 மார்ச் மாதம் முதல் தொடர்பு ஏற்படுத்தியவள் இந்த ஸ்ரீ பாலா த்ரிபுரசுந்தரி.
நமது மறைமலை நகர், சட்ட மங்கலம் கிராமம், ஸ்ரீ பாலா த்ரிபுரசுந்தரி கோவிலில் இந்த நவாவரண பூஜையை செய்ய விருப்பமுள்ளோர் , ஸ்ரீ கே எம் சுப்ரமணியன் அவர்களை 9710586384 என்ற நம்பரில் தொடர்பு கொள்ளலாம்.
Recent Posts
See Allமுன்னொரு காலத்தில் பண்டாசுரன் என்னும் அசுரன் ஒருவன் இருந்தான். அவன் தேவர்களுக்கு அளவற்ற தொல்லைகள் தந்து வந்தான். தேவர்கள் அனைவரும்...
ஸ்ரீவித்யா நவாவர்ண பூஜை என்பது ஒரு மிகச் சிறந்த பூஜை. சாதகன், தகுந்த ஒரு குரு மூலம் ஸ்ரீவித்யா பல மந்திர உபதேசங்கள் பெற்று, அந்த...