ஸ்ரீ பாலாவின் அவதாரம்
- karthikps
- Feb 25, 2018
- 1 min read
Updated: Jan 8, 2021
முன்னொரு காலத்தில் பண்டாசுரன் என்னும் அசுரன் ஒருவன் இருந்தான். அவன் தேவர்களுக்கு அளவற்ற தொல்லைகள் தந்து வந்தான். தேவர்கள் அனைவரும் சேர்ந்து அவ்வசுரனை மாய்த்தொழிக்க வழிதேடினர். தேவர்கள் ஒன்றுகூடி யாககுண்டம் அமைத்து பெரும் யாகம் செய்தனர். சித் அக்னி குண்டம் எனும் அவ்யாககுண்டத்தில் பூர்ணாஹுதி செய்தபோது அன்னை ஸ்ரீராஜராஜேஸ்வரி உதித்துஎழுந்தாள். தேவர்கள் அனைவரும் அவளை துதித்துப் பாடி வணங்கினர். பண்டாசுரனை வதைக்க அம்பாள் அவதரித்தாள் என மகிழ்ந்தனர்.
இதைக் கேள்வியுற்ற பண்டாசுரன் தனது முப்பது புத்திரர்களை யுத்ததிற்கு அனுப்பவும், அன்னை லலிதா தன்னிலிருந்து 9 வயது சிறுமியாக பாலாதிரிபுரசுந்தரியைத் தோற்றுவித்தாள். அவள் அன்னையின் நான்காவது கண் போன்றவள். அன்னையின் மூச்சுகாற்று போன்று அவளருகில் வசிப்பவள். பூரணமாக விரிந்த செந்தாமரையில் வீற்றிருந்து தன் உடல் தேஜஸ்ஸினால் அனைத்து திக்குகளையும் செம்மையாக ஒளி பெற செய்பவள். கரங்களில், சுவடி, ஜபமாலை ஏந்தி அபயமும், வரமும் அளிப்பவள்.
அன்னை ராஜராஜேஸ்வரி தன் குழந்தை பாலாவிற்கு தன் கவசத்திலிருந்து ஒருகவசமும், வில், அம்பு, பாசம்’ முதலானவைகளை தன் ஆயுதத்திலிருந்து கொடுத்து, தன் கரும்புவிலிருந்து கர்ணீ ரதத்தையும் தோற்றுவித்து கொடுத்தாள். குழந்தை பாலா பண்டபுத்திரர்கள் முப்பது பேரையும் வதம் செய்து பண்டாசுரனையும் பலமிழக்கச்செய்து, வீரஸாகஸங்களுடன் தன் அன்னையிடம் திரும்பினாள். அவளின் யுத்தத்திறமையைக் கண்டு தேவரும், மூவரும் யாவரும் வியந்து போற்றி மகிழ்ந்தனர்.
Recent Posts
See Allஸ்ரீவித்யா நவாவர்ண பூஜை என்பது ஒரு மிகச் சிறந்த பூஜை. சாதகன், தகுந்த ஒரு குரு மூலம் ஸ்ரீவித்யா பல மந்திர உபதேசங்கள் பெற்று, அந்த...